சர்கார் விவகாரம்..! முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனு மீது  இன்று மாலை விசாரணை...!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்கார் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனு மீது  இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்கார் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனு மீது  இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில் ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டது.

unknown node

இதன் பின் நேற்று இரவு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை முருகதாஸ் தனது டிவிட்டர் பகக்த்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை முருகதாஸ், நீதிமன்றத்தில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மனு கொடுத்தார்.

இந்நிலையில்  முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.