சென்னை ஆளுநர் மாளிகை அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? என்பதை கண்டித்து நேற்று போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தை மதிமுக மற்றும் திராவிடர் கழகம் நடத்தியது.டிசம்பர் 3 ஆம் தேதி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஆளுநர் மாளிகை அருகே சின்னமலை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
unknown nodeஇந்த போராட்டத்தில் வைகோவுடன் முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்றனர்.பின் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றதால் வைகோவுடன் முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ் இளங்கோவன் கைது செய்யப்பட்டனர்.பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகை அருகே தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வைகோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 687 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.