#Breaking:நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் – தமிழக அரசு முடிவு!

The Tamil Nadu government has informed the Chennai High Court that it has decided to grant a month's parole to Nalini,

சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

வயது மூப்பின் காரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கடைசி காலத்திலாவது மகளுடன் இருக்க வேண்டும் என்றும்,எனவே தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் கோரி நளினி தாயார்  தொடுத்த வழக்கில்,அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னாவின் விளக்கத்தையேற்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில்,தற்போது நளினிக்கும் ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதனைத் தொடர்ந்து,விரைவில் அவர் பரோலில் வருவார் என்று தெரிய வந்துள்ளது.