வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நாளை உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
unknown nodeஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நாளை உருவாக உள்ளது.குறிப்பாக ஆந்திரா மற்றும் அதனையொட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.