“இனியாவது திருந்துங்கள்… இல்லையேல் மக்கள் துரத்தி அடிப்பார்கள்” – தமிழக அரசை எச்சரித்த டிராபிக் ராமசாமி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) இன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
unknown nodeஇதனால் சாலையோரங்களில் வழிநெடுகிலும் விபத்து ஏற்படும் வகையில் ஏராளமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.சாலையில் இரண்டு ஓரங்களும் தெரியாத அளவுக்கு சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சாலை விபத்து ஏற்படும் சூழல் உருவாக்கி உள்ளது என மக்களின் பாதுகாப்பு கருதி சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அவசர வழக்காக இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு எடுத்து விசாரணை நடத்தி சாலை ஓரங்களில் உள்ள பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
unknown nodeதீர்ப்பையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த டிராபிக் ராமசாமி அதிமுக அரசை எச்சரித்தார்.அப்போது அவர் பேசும் போது “இனியாவது நீங்கள் திருந்துங்கள்… இல்லை என்றால் மக்கள் உஙகளை துரத்தி அடிப்பார்கள்” என்று தமிழக அரசை எச்சரித்தார் டிராபிக் ராமசாமி .
DINASUVADU