சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை..!

சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்  வெளியிட்ட அறிவிப்பில், கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இதர பகுதிகளில் மழை இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் .

இந்நிலையில் தற்போது சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, தரமணி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.