பயங்கரவாதிகளின் கார் பதிவு எண்கள் வெளியீடு! தீவிர கண்காணிப்பில் போலீசார்!

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல

கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள்ளதாக உளவுத்துறை கூறிய தகவலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால், கோவையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கர்நாடக எல்லை, கேரளா எல்லை என கோவை, திருப்பூர் புறநகர் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது பயங்கரவாதிகள் உபயோகப்படுத்தியதாக தற்போது கார் வகை மற்றும் கார் பதிவு எண் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. ஆவை,

INNOVA TN 70 A 7779

SWIFT TN-02 Q-7756

XYLO TN-99 Q-5260

இந்த கார்களை பொதுமக்கள் எங்கு பார்த்தாலும் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.