#BREAKING: ரூ.2 கோடி மோசடி- அதிமுக நிர்வாகி கைது!

AIADMK executive arrested in Erode for allegedly defrauding Rs 2 crore

ஈரோட்டில் வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது.

ஈரோட்டில் காய்கறி வியாபாரிகளுக்கு வீட்டுமனை தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க பொருளாளராக வைரவேல், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார். வீட்டுமனை வாங்கி தருவதாக கடந்த 2015ல் ரூ.2 கோடி பணம் வாங்கியதாக தகவல் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடியில் ஈடுபட்ட மேலும் 10 பேரை காவல்துறை தேடி வருகிறது. வாங்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை 5 நிர்வாகிகள் தங்களின் பெயரிலும், உறவினர்கள் பெயர்களிலும் பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் நிலத்தை ரூ.12 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.