அரசியல் ஒன்றும் பிக்பாஸ் அல்ல... ரம்யாவுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலுக்கு கிடைக்காது!

Vaigai Selvan has said that the political arena is not like the Big Boss and that Kamal will not even get the votes that Ramya.

அரசியல் களம் பிக்பாஸ் போன்றது அல்ல எனவும் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலஹாசனுக்கு கிடைக்காது எனவும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்கள் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டிடிவி தினகரன் தான் எனவும், வாடகை பாக்கி வைத்து இருந்த ரஜினிகாந் இனி என்னிடம் வாடகை கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை எனக்கூறி சென்று விட்டதாகவும் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி நாராயணன் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோருக்கு கிடைத்த ஓட்டுகள் கூட அரசியலில் கமலஹாசனுக்கு கிடைக்காது எனக் கூறியுள்ளார். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு நல்ல பெண்ணாக இருப்பதால் பிழைத்துப் போகட்டும் என நானே 5 ஓட்டுகள் போட்டேன் எனவும் அரசியல் களம் ஒன்றும் பிக்பாஸ் அல்ல மூன்று கோடி நான்கு கோடி விழுவதற்கு எனவும் கமலஹாசனை சீண்டி பேசியுள்ளார்.