ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதும் இல்லை , பொறுமையும் இல்லை -சரத்குமார் விமர்சனம்

This news gives information about Stalin's legislative assembly does not formally and have no patience - Sarath Kumar review

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் அனைத்து காட்சினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதில்லை , அப்படியே வந்தாலும் பொறுமையாக  இல்லாமல் வெளிநடப்பு செய்து விடுவார் என சரத்குமார் விமர்சனம் செய்தார்.

மேலும் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலில் திமுகவிற்கும் பங்கு உள்ளது என விமர்சித்துள்ளார்.