கனமழை காரணமாக 2 மாவட்டகளில் ஒருசில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி,

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம்,ராணிப்பேட்டை  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டையில் கனமழை காரணமாக ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் கனமழை காரணமாக  நீலகிரி மாவட்டத்தில்  குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக  ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.