திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா பிறந்த தினம் இன்று...!

Today is the birthday of the scholar Anna Varghese, the founder of the Dravidian movement.

திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் தான் தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா என அறியப்படும் சி.என்.அண்ணாதுரை. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பை சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அதன்பின் கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் கற்றுள்ளார்.

கல்லூரி முடித்தவர்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் எனும் மனப்பான்மை அதிகம் இருந்த காலகட்டத்தில், ஆங்கிலம் பேசினால் தான் கௌரவம் என நினைத்தவர்களுக்கு எதிர்ப்பாக அண்ணா தமிழில் மட்டுமே பேசியுள்ளார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்த இவர், அதன் பின் திராவிட கழகத்திலிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.

unknown node

அதன்பின் மாநிலங்களவை உறுப்பினராக 1962 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1960 இல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இந்தியா குடியரசான பிறகு காங்கிரஸ் இல்லாமல் ஆட்சி அமைத்த முதல் கட்சி அறிஞர் அண்ணாவின் திராவிட கழக கட்சி தான். அரசியலில் புதிய வரலாறு படைத்த இவர் தான் மதராஸ் மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என பெயரிட்டவர்.

unknown node

அதன் பின் தனது 59-வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா 1969 ஆம் ஆண்டு மறைந்தார். ஒன்றரை கோடி மக்கள் கலந்து கொண்ட இவரது இறுதிச் சடங்கு, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியலில் சாதனை புரிந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.