இன்றைய தலைமுறையினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இப்பிரச்சனைக்கு பல செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை அதிகபடுத்தி கொண்டவர்கள் நம்மில் எத்தனை நபர்கள் இருக்கிறோம்.
இளநரை உருவாக காரணம்:
unknown nodeசாதாரண முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில் பல விளம்பரங்களையும் பார்த்து விட்டு பலவிதமான கெமிக்கல் கலந்த பொருள்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் அந்த பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.
நாம் தலைக்கு குளிக்கும் போது பல கெமிக்கல் கலந்த பல ஷாம்புகளை பயன்படுத்துவதாலும் இளநரை பிரச்சனை ஏற்படலாம்.எனவே பலவிதமான கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு நாம் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி சீகைக்காய் , செம்பருத்தி முதலிய பொருட்களை கொண்டு இயற்கையான வழிமுறைகளை உபயோகபடுத்தி தயாரிக்கும் ஷாம்பூக்களை பயன்படுத்தலாம்.
எனவே இந்த பிரச்சனைகளுக்கு இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி தீர்வு காணலாம். இந்த பதிப்பில் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இளநரையில் இருந்து நமது அழகிய முடியை பாதுகாப்பது எப்படி என்பதை நாம் படித்தறிவோம்.
நெல்லிக்காய் :
unknown nodeபொதுவாக நம்முடைய தலைமுடியில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக நெல்லிக்காய் பயன்படுகிறது.நெல்லிக்காயை நாம் தினமும் பயன்படுத்துவதால் நமக்கு பல சத்துக்களை கொடுக்கிறது.குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது.எனவே நெல்லிக்காய் நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு தீர்வாக விளங்குகிறது.
நெல்லிக்காய் 5, மருதாணி இலை,கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி,2 லவங்கம் இவற்றை தனித்தனியே அரைத்து சாறெடுத்து ஒன்றாக கலக்க வேண்டும்.இதனுடன் 3 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து தலையில் பூசி அரைமணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் இளநரை நம்மை நெருங்காது.
கடுக்காய்:
unknown nodeகடுக்காய் சித்த வைத்தியத்தில் பல அளப்பரிய நன்மைகளை செய்து வருகிறது. எனவே இது பல வகையான உடல் நோய்களுக்கு சித்த வைத்தியத்தில் பயன்படுத்தும் மிக சிறந்த மூல பொருளாக விளங்குகிறது.இது உடலில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை கட்டுப்படுத்த சிறந்த மருந்தாகும்.
பிஞ்சு கடுக்காய் ,நெல்லிக்காய், கருவேப்பிலை இவை மூன்றையும் சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் இடித்து வைத்து கொள்ள வேண்டும்.இவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி அதில் இந்த மூன்று பொருள்களையும் ஊற விட வேண்டும்.
நாம் தலைக்கு குளிக்கும் நேரங்களில் இந்த எண்ணையை லேசாக சூடு பண்ணி தலைக்கு தேய்த்து குளித்து சீகைக்காய் போட்டு அலசலாம்.இவ்வாறு செய்து வர படிப்படியாக இளநரை இருந்த இடமும் தெரியாது.முடியும் கறுப்பாகும்.
வேப்பங்கொளுந்து:
unknown nodeவேப்பங்கொளுந்து உடலில் ஏற்படும் பல நோய்களை கட்டுப்படுத்தும் அருமருந்தாக விளங்குகிறது.மேலும் இது மிக சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இது பல் சரும பிரச்சனைகளுக்கும் மிக சிறந்த தீர்வாகும்.
வேப்பங்கொளுந்து ,நெல்லிமுள்ளி,கறிவேப்பிலை ,பிஞ்சு கடுக்காய் ,அவுரி விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து நைசாக அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும். இதில் ஆலிவ் ஆயிலை விட்டு வெயிலில் வைத்து எடுக்கவும்.இந்த எண்ணையை தினமும் தடவி வந்தால் நரைமுடி பிரச்சனை மிக விரைவில் குணமாகும்.