பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை போன்ற போலி ஆவணங்களை தயாரித்த 10 பேர் கைது!

Bangalore City Crime Branch officials have arrested 10 people for producing fake documents including ban card and Aadhar cards.

பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் அரசாங்கத்தால் நடத்தப்படும் ஏஜென்சிகளின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்ததற்காக, பெங்களூரு நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் 10 பேரை கைது செய்துள்ளனர்.பான் கார்டு, ஆதார் அட்டைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பெங்களூர் இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாடீல் அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாடிக்கையாளர்கள் யார், அவர்கள் ஏன் அவர்களை அணுகினார் என்றும் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.