2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்! பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு.
நேற்று பெங்களூருவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளான். இதனையடுத்து, அவனது பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், சிறுவனை விடுவிக்க ரூ. 2 கோடி பிணையத் தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு, மேலும், மிரட்டல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால், தங்கள் மகன் கடத்தப்பட்டது குறித்து சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, பெங்களூருவின் அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
காவலர்கள் செயல்பட்ட நிலையில், சிறுவன் 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டான். மேலும், தங்கள் மகனை பத்திரமாக மீட்டுத் தந்த போலீசாருக்கு, சிறுவனின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025