ஒரு வருடத்தில் 2,981 பேர் பலி அதிர்ச்சி தகவல்....!!

கடந்த ஒரு ஆண்டுகளில் மும்பையில் மட்டும் 2 , 981 பேர் ரயில் விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது. மும்பையில் ரயிலின் சேவை மிக அவசியமான ஒன்றாக

கடந்த ஒரு ஆண்டுகளில் மும்பையில் மட்டும் 2 , 981 பேர் ரயில் விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது.

மும்பையில் ரயிலின் சேவை மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.இருந்தும் மும்பையில் ரயிலின் சேவை போது மானதாக இல்லை.

அதே போல ரயிலின் சேவை எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ அதே அளவுக்கு விபத்தும் அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையை ரெயில்வே போலீசார் வெளியிட்டனர்.

அதில் , மும்பையில் கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,981 பேர்  என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த விவராத்தில்1,619 பேர் தண்டவாளத்தை கடந்து  முயன்ற போது ரெயில் மோதி உயிரிழந்ததாகவும் , 711 பேர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளதாக விவரம் தெரிவிக்கின்றது.மேலும்

2017-ம் ஆண்டு மும்பையில் ரெயில் விபத்துத்தில் சிக்கி 3,014 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.