மஹராஷ்டிராவில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மஹராஷ்டிராவில் உள்ள பல்கரில் இன்று காலை 4 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களில் தற்பொழுது நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கரில் இன்று காலை நான்கு மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025