முறைசாரா தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய்...17_ஆம் தேதி முதல் அமுல்...!!

முறைசாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் வரும் 17ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் சேர வருகின்ற 15_ஆம் தேதியில் இருந்து பெயர்களை பதிவு

முறைசாரா தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டம் வரும் 17ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் சேர வருகின்ற 15_ஆம் தேதியில் இருந்து பெயர்களை பதிவு செய்யலாம். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் , கட்டுமான தொழிலாளர்கள் , சிறு வியாபாரிகள் தொழிலாளர்கள் , வீட்டு வேலைக்காரர்கள் போன்ற முறைசாரா தொழிலாளர்கள் இணையலாம்.இதில் 18 வயதிலிருந்து 40 வயதுள்ள முறைசாரா தொழிலாளர்கள் எவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். இவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் சேருவோர் வயதுக்கேற்ப மாதாமாதம் பிரீமியம் தொகை  செலுத்த வேண்டும் அதில் 18 வயதில் சேர்ந்தால் ரூபாய் 55_தும் , 29 முதல் சேர்ந்தால் ரூபாய் 100_ரூம்  40 வயதில் சேர்ந்தால் ரூபாய் 200_யும் செலுத்த வேண்டும். இவர்களுக்கு 60 வயதை கடந்த பிறகும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கும் , ஆதார் எண்ணும் அவசியம் வைத்திருக்க வேண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு பாதி அளவு தொகை வழங்கப்படும் என்று மத்திய தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.