கிஷ்த்வார் :ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஜோசிதி (சாஷோட்டி) பகுதியில் இன்று காலை 12:30 மணியளவில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடர் மச்சைல் மாதா யாத்ரையின் தொடக்கப் பகுதியான இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேகவெடிப்பால் ஏற்பட்ட இந்த திடீர் பெரு வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கிய நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம், உள்ளூர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் ராணுவம் ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
unknown nodeஇந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார். ஜம்மு கோட்ட மாவட்ட ஆணையர் ரமேஷ் குமார் மற்றும் துணை ஆணையர் பங்கஜ் ஷர்மா ஆகியோர் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து, உடனடி நடவடிக்கைகளை உறுதி செய்துள்ளனர். மச்சைல் மாதா யாத்ரை பாதை பாதிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து மற்றும் யாத்ரீகர்களின் பயணம் தடைபட்டுள்ளது.
unknown node