இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 560 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,10,64,908 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 870 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,10,64,908 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 560ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,13,091 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 43,916பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,02,27,792 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,24,025 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை39,96,95,879தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,கடந்த 24 மணி நேரத்தில் 42,12,557 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.