தெலுங்கானா :ஹுசூராபாத் நகரில் உள்ள அம்பேத்கர் சௌக்கில் மார்க்கெட் ஒன்று இருக்கிறது. இந்த மார்க்கெட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக பழக்கடைகளில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் அணைக்க முடியவில்லை. பிறகு, உடனடியாக அவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஹூசூராபாத் சிஐ ரமேஷ், எஸ்ஐ சாம்பையா கவுடு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் ஹுசூராபாத் மற்றும் ஜம்மிகுண்டாவில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
unknown nodeஇந்த தீ விபத்தில் 16 பழக்கடைகள், 9 கடைகள் மற்றும் ஏழு சிறிய வாழை ஏற்றி செல்லும் வண்டிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால் காவல்துறையினர் இதனை பற்றி விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து சம்பவம் குறித்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், நஷ்டமடைந்த சிறு வியாபாரிகளுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பொன்னம் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
