tree uprooted [FIle Image]
சென்னை : ஹைதராபாத்தில் மருத்துவமனைக்குச் சென்ற தம்பதியினர் மீது மரம் விழுந்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார்.
இன்று ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு தம்பதி இரு சக்கர வாகனத்தில் மருத்துவ சோதனைக்காக வந்தபோது துயரமான சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவ சோதனை முடிந்து வீட்டிற்கு பைக்கில் கிளம்பும் போது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு இருந்த மரம் ஒன்று திடீரென சரிந்து கீழே விழுந்தது.
இதில், கணவர் ரவீந்திரா மரம் மேலே விழுந்ததில் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மனைவி சரளா தேவி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவர் தற்போது சிகிச்சைக்காக அங்கு இருந்த காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரம் கீழே சரிந்து விழுந்ததை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரவீந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் மரம் வேரோடு சரிந்து கீழே விழுந்தது என்பது தெரியவந்துள்ளது. விபத்தின் சிசிடிவி காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மரம் கீழே சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…