மும்பை :நேற்று (நவம்பர் 27) மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு பெண் பேசியதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தததாகவும் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, வழக்கை விசாரணை செய்த மும்பை போலீசார், அந்த போன் கால் மும்பை புறநகருக்கு வெளியில் இருந்து வந்ததாக கூறி, ஒரு பெண்ணை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு, நவம்பர் 12ஆம் தேதி நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஷ்கரை சேர்ந்த பைசன் கான் எனும் இளைஞர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
