பிரபல நடிகர் அம்பரீஷ் மரணம் ..!அம்பரீஷ்க்கு நினைவிடம் அமைக்கப்படும்,3 நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும்..!  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு

அம்பரீஷ் உடல் பொதுமக்களின் பார்வைக்காக காலை 8 மணி முதல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வைக்கப்படும்  என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு

அம்பரீஷ் உடல் பொதுமக்களின் பார்வைக்காக காலை 8 மணி முதல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வைக்கப்படும்  என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் .இவருக்கு வயது 66 ஆகும் .இவர் கர்நாடக காங்கிரஸ்  அரசியல்வாதியும் ஆவார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் அம்பரீஷ் .அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

unknown node

அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.நேற்று இரவு  உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்தார்.இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  அம்பரீஷ் உடல் பொதுமக்களின் பார்வைக்காக காலை 8 மணி முதல் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் வைக்கப்படும் .அம்பரீஷ்க்கு நினைவிடம் அமைக்கப்படும்,3 நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.