ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம்.! கோடியில் புரண்ட வெளிநாடு பாடகர்கள்…

Anant Ambani bash

Anant Ambani: மிகவும் சுவாரசியமாக பேசப்படும் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. முன்னதாக, இவர்களின் நிச்சியத்தார்தம் மிக சிறப்பாக நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டமான (ப்ரீ வெட்டிங் விழா) குஜராத்தின் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

Anant Radhika Wedding rihanna
Anant Radhika Wedding rihanna [file image]

READ MORE – அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள அம்பானி எஸ்டேட்டில் நேற்று (1ம் தேதி முதல் தொடங்கி கி 3ம் தேதி வரை) மூன்று நாள் திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை 2,000 முதல் 2,500 பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அம்பானி வீட்டு திருமணம் என்றால் சொல்லவா வேண்டும்.

Anant Radhika Wedding rihanna
Anant Radhika Wedding rihanna [file image]
எப்பொழுதும், அம்பானி வீட்டு விழா மற்றும் நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர்கள் வரவழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ப்ரீ வெட்டிங் விழா மிகவும்பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் நிகழ்ச்சிக்கு பிரபல அமெரிக்கன் பாடகியான ரிஹானா அழைக்கப்பட்டு இருந்தார்.

READ MORE – களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

தொடக்க நாளான நேற்று மாலை 5:30 மணிக்கு “An Evening in Everland” என்ற தலைப்பின் கீழ் தொடங்கியது. ரிஹானாவும் தனது இசைக்குழுவுடன் வந்து பாடல்களை பாடி நடனம் ஆடி அங்கு வந்த பிரபலங்களையும் மிகவும் குஷி படுத்தினார். அந்த அளவிற்கு அவர் பாடிய பாடல்களும் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோடியில் புரண்ட பாடகர்கள் 

தற்பொழுது, இதுவரை அம்பானி வீட்டு விழா மற்றும் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு பாடகர்கள் எவ்வளவு ஒரு நாள் சம்பளம் வாங்கியிருப்பார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரபல அமெரிக்க பாடகியான நடிகையுமான பியான்ஸ் விழாவை சிறப்பாக்கினார். அவருக்கு ரு.33 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணத்திற்கு முந்தையநிகழ்வுக்கு கிறிஸ் மார்ட்டின் பங்கேற்றார், இவருக்கு ரூ.8 கோடி கொடுக்கப்பட்டதாம். 2019-ல் மும்பையில் நடைபெற்ற ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் Mangal Parv ceremony-க்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 12 கோடி வழங்கப்பட்டதாம். இத்தாலியின் லேக் கோமோவில் நடந்த இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் நிச்சயதார்த்த விழாவில் அமெரிக்க பாடகர் ஜான் லெஜெண்ட் வருகை தந்தார். அவருக்கு ரூ.8 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்