சரக்குப் போக்குவரத்துக்கு மாநிலங்களிடையே மின்வழிச்சீட்டு?

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கு மின்வழிச்சீட்டு முறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கு மின்வழிச்சீட்டு முறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக  தெரிவித்துள்ளார்.

சரக்கு சேவை வரிக்கான குழுவின் 26ஆவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சரக்கு சேவை வரிக்கான அறிக்கை தாக்கல் செய்யும் முறை குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இப்போதுள்ள முறையே மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஏற்றுமதியாளர்களுக்கான வரி விலக்கு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலங்களிடையே சரக்குப் போக்குவரத்துக்கான மின்வழிச்சீட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், மாநிலத்துக்கு உள்ளேயே சரக்குப் போக்குவரத்துக்கு மின்வழிச் சீட்டு ஏப்ரல் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜூன் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் சரக்குப் போக்குவரத்துக்கு மின்வழிச்சீட்டே நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.