மீண்டும் முதல இருந்து!!! விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை.. இன்று முதல் அமல்!

By

சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் தொடக்கம்.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவல் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதில் நாட்டில் கணிக்கப்பட்ட மூன்றாவது அலைகளில் சீனா தற்போது முதல் இடத்தில் உள்ளது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய மூன்றாவது அலை இந்த குளிர்காலத்தில் உச்சத்தை எட்டும் என்றும் எச்சரித்து உள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு, சீனாவின் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், கொரோனா பரவல் மீண்டும் தொடங்க ஆரம்பித்த காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை எடுக்கும் முறை மீண்டும் இன்று முதல் அமலுக்கு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளில் உத்தேசமானவர்களிடமிருந்து கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Dinasuvadu Media @2023