பீகார் மாநிலம் சிமாரி பகுதியை சார்ந்தவர் மிதிலேஷ் (24).இவருடைய கார் சாலையில் சென்றால் பார்ப்பதற்கு சிறிய ஹெலிகாப்டர் செல்வது போல இருக்கிறது.இவர் வைத்து உள்ள நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்து அப்பகுதியில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
சிறிய வயதில் இருந்து மிதிலேஷுக்கு ஹெலிகாப்டர் மீது அதிக கவனம் இருந்து உள்ளது. இதனால் ஒரு ஹெலிகாப்டரை உருவாக்க வேண்டும் என நினைத்தார்.ஆனால் அவரிடம் வசதி இல்லாததால் ஒரு ஹெலிகாப்டர் வடிவில் ஒன்றை உருவாக்க வேண்டும் என மிதிலேஷ் நினைத்தார்.
unknown nodeஅதன் படி தனது சகோதரின் உதவி உடன் நானோ காரை 7 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல வடிவமைத்து உள்ளார்.இந்த காரை வடிவமைப்பதற்கு 7 மாதங்கள் மிதிலேஷ் எடுத்து கொண்டார்.
இது குறித்து மிதிலேஷ் கூறுகையில் ,சிறிய வயதில் இருந்து வடிவமைத்து அதை பறக்கவிட வேண்டும் என நினைத்தேன் ஆனால் தன்னிடம் வசதிகள் இல்லாததால் இந்த ஹெலிகாப்டர் வடிவில் காரை உருவாக்கியதாக கூறினார்.