ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தி வருகின்றன என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றன. அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றன. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node