மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

this news gives information about BJP will win over 300 seats in Lok Sabha polls - Union Minister Piyush Goyal

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.மோடியை மீண்டும் பிரதமராக்கும் நோக்குடன் கூட்டணி தலைவர்கள் பாடுபடுவர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.