பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் இந்தியாவில் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை மும்மூரமாக நடத்தி வருகின்றது.
இதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் தாங்கள் கட்சியின் மூலம் நடைபெறும் பிரச்சாரங்கள்,முக்கிய நிகழ்வுகள் உட்பட அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கட்சியும் ஒரு தனி இணையதள பக்கம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலமாகவும் முக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்,அறிக்கையில் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து வருகின்றது.
unknown nodeஇந்நிலையில் இன்று பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org முடங்கியது.இதனால் கட்சி தொடர்பான வேறு எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை. இதனை அறிந்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.