காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், காதலன் தற்கொலை!

A 32-year-old man from Maharashtra has committed suicide by hanging himself after his girlfriend was engaged to be married to someone else.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 32 வயதுடைய வர்கீட் எனும் நபர் தனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, இந்த வர்கீட் எனும் நபர் ஒரு பெண்மணியை காதலித்து வந்ததாகவும், இவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததாகவும் கூறி உள்ளனர்.

ஆனால், அண்மையில் இவரது காதலிக்கு வேறு ஒரு நபருடன் பெற்றோர் திருமணத்தை நிச்சயித்ததன் காரணமாக, மனம் சோர்வடைந்து ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு படிக்கட்டிலிருந்தபடி துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா அல்லது இது கொலையா என்பது குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.