இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்2,35,532 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 871 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,08,58,241 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,51,209 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 15,677 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,08,58,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 871 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,93,198 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 3,35,939பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,83,60,710 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,01,278 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 1,65,04,87,260 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 56,72,766 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.