#BREAKING: அதிகரிக்கும் கொரோனா – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

With the spread of corona across the country, Prime Minister Modi advised on preventive measures.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அவரச ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால், கொரோனா பாதிப்பு நிலவரம், தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.