ஆண் நண்பருடன் டிக் டாக் செய்த பெண்! அக்கா – தங்கையை அடித்தே கொன்ற கணவன்!

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆண்டிராய்டு செயலியில் முக்கியமான செயலி டிக் டாக். இந்த செயலியை பயன்படுத்தும் சிலருக்கு இதனை

டிக் டாக் செயலியை தற்போது லட்சக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலி காரணமாக பல மரணங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயணங்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஆண்டிராய்டு செயலியில் முக்கியமான செயலி டிக் டாக். இந்த செயலியை பயன்படுத்தும் சிலருக்கு இதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவிற்கு மோகம் அதிகமாகிவிடுகிறது. அது பலருக்கு பிரச்சனையாகி சில நேரம் உயிரிழப்புகள் எழும் அளவிற்கு ஆபத்தாகி விடுகிறது.

unknown node

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் பகுதியினை சேர்ந்தவர் சயீப். இவரது மனைவி பெயர் மஞ்சு. மஞ்சு டிக் டாக் செயலியை அதிகம் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அதனால், இருவருக்கும் பிரச்சனை ஆகி இருக்கிறது.

அதனால் இருவரும் பிரிந்து மஞ்சு அவரது தங்கை மனிஷா உடன் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் மஞ்சு டிக் டாக்கில் அவரது ஆண் நண்பருடன் இணைந்து டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை கண்ட சயீப் தனது நண்பர் முஸ்தபா உடன் மஞ்சு தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சயீப்பிற்கும், மஞ்சுவிற்கும் சண்டை அதிகமாகியுள்ளது. அப்போது சயீப் தோசை கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டார். உடன் இருந்த மஞ்சுவின் தங்கை மனிஷாவையும் அடித்து கொலை செய்துவிட்டு, சயீப் மற்றும் முஸ்தபா இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.