சிட்ரங் புயல் வங்கதேசத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பரிசால் பகுதியில் நேற்றிரவு(திங்கள் கிழமை) கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடந்த போது மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த மழை நீடித்தது. மேலும் வங்கதேசத்தின் பர்குனா, நரைல், சிராஜ்கஞ்ச் மற்றும் போல் தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த 9 பேர் இந்த புயலின் கோரதாண்டவத்துக்கு பலியாகியுள்ளனர்.
புயல் கரையைக் கடந்து வலுவிழந்தாலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் மிகுந்த மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.
unknown node