பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த பிரபல நடிகர்!மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டி

காங்கிரஸ் கட்சியில் இணைந்த  சத்ருகன் சின்கா  பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த  சத்ருகன் சின்கா  பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா சுமார் 30 ஆண்டுகளாக பாஜகவில் இருந்துள்ளார்.இவர்  பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் நரேந்திரமோடியையும்,பாஜக தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சத்ருகன் சின்கா, பாஜகவில் அதிருப்தியாளராக உள்ளார்.

அதேபோல் இவர் 2 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் கடும் அதிருப்தியில் இருந்தார்.

unknown node

இந்நிலையில் இன்று  சத்ருகன் சின்கா காங்கிரசில் இணைந்தார்.பாஜகவில்  இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.ஆனால் இவர் விலகிய சில மணி துளிகளிலே அவருக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த  சத்ருகன் சின்கா  பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவார் என்று   காங்கிரஸ் தலைமை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது .பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து சத்ருகன் சின்கா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.