இனிய செய்தி...!சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.6.52,மானியமில்லாத சிலிண்டர் ரூ.133 விலை குறைப்பு....!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது மாறி மாறி ஏறிக்கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்படுகிறது.அதேபோல்  மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.133  குறைக்கப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று  எண்ணெய் நிறுவனங்கள்   அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த விலைக் குறைப்புக்கு முன்னதாக சிலிண்டருக்கு ரூ.14.13 ஆக உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.