விமான போக்குவரத்து அமைச்சக ஊழியருக்கு கொரோனா தொற்று .!

கடந்த 15-ம் தேதி வரை அலுவலகத்தில் பணிபுரிந்த விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 15ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றியவர் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025