இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா..!!

In India, 1.68 lakh people were diagnosed with coronavirus in a single day yesterday

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் இதுவரை மொத்தமாக  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 904 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மொத்தமாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 1,70,179 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,21,56,529 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று மட்டும் 75,086 பேர் வீடு திருப்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 12,01,009 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.