பாஜக தலைவரின் இல்ல திருமணவிழாவில் கொரோனா விதிமீறல்! 8 பேர் கைது!

The wedding of the BJP leader, nephew was held. Gujarat police have arrested eight people for violating guidelines at a wedding.

பாஜக தலைவர், மருமகனின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வல்சாத் மாவட்டத்தில் பாஜக தலைவர், மருமகனின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் வழிகாட்டுதல்களை மீறியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘திருமணத்தில் விருந்தினர்கள் நடனமாடுவதை கண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முகமூடி இல்லாமல் கூடியிருந்ததாகவும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். திருமணத்தில் கலந்து கொண்ட மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.