ஆஸ்திரியாவிற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் – பிரதமர் மோடி

வியன்னாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வியன்னாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியாவின்  தலைநகர் வியன்னா நகரில்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.வியன்னா நகரில் சுமார் 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீவிரவாதி ஒருவரும் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிசூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,வியன்னாவில் நடந்த  பயங்கரவாத தாக்குதல்களால் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஆஸ்திரியாவுடன் துணை நிற்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறன் . எனது  பிரார்த்தனைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

unknown node