டெல்லி பாரதியார் சிலை கைத்தடி மாயம்! டெல்லி துணை முதல்வருக்கு ஜி.கே.வாசன் கடிதம்!

Member of Parliament GK Vasan wrote a letter to the Deputy Chief Minister of Delhi asking him to put back the cane on Bhartiyar's statue

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம்.

இன்று நாடு முழுவதும் பாரதியாரின் 139-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று பல கட்சி தலைவர்களும் டெல்லி, சுப்பிரணியன் மார்க் சாலையில் இருக்கும், பாரதியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாரதியாரின் சிலையில் கைத்தடி காணாமல் போயுள்ளது குறித்து எந்த தலைவர்களும் கவனிக்கவில்லை. மேலும், இதுகுறித்து அந்த சிலையை சுற்றி தூய்மைப்படுத்தக் கூடியவர்களிடம் கேட்ட போது, அந்த கைக்கம்பு சில வாரங்களாகவே காணாமல் போயுள்ளது. அதுகுறித்து யாரும் பதில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் அவர்கள், பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடியை மீண்டும் வைக்க கோரி டெல்லி துணை முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘பாரதியாரின் கைத்தடி காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக புதிய கைத்தடியை வைக்க வேண்டும். வரும் நாட்களில் சிலையினுடைய பராமரிப்பை அரசு சிறப்பாக, முறையாக உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.’ என எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.