தோனியிடம் அணியில் எந்த வீரரும், ஜூனியர், சீனியர் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் அணுகலாம் என்று அம்பதி ராயுடு பாராட்டியுள்ளார்.
unknown nodeஆசியக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்கான அணியில் தேர்வான அம்பதி ராயுடு, யோயோ டெஸ்டில் தோல்வி அடைந்த காரணத்தால் தொடரில் இடம் பெறவில்லை. அதேசமயம், ஆசியக் கோப்பைக்கு தேர்வாகியுள்ளார்.
unknown nodeஆசியக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி ஹாங்காங் அணியையும், 19-ம் தேதி பாகிஸ்தானையும் இந்திய அணி சந்திக்கிறது. மேலும், இந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கூல் கேப்டன், அனுபவ வீரர் தோனியும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து அம்பதி ராயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் கேப்டன் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது மிகப்பெரிய இழப்புதான். அதேசமயம், அவர் இல்லாவிட்டாலும்கூட, வெற்றி பெறும் அளவுக்கு திறமையைன அணியாகவே இந்திய அணி இருக்கிறது.
unknown nodeமுன்னாள் கேப்டன் தோனி அணியில் இருப்பது மிகப்பெரிய பலம், அனைத்து வீரர்களும் ஜூனியர், சீனியர் பார்க்காமல் அணுகக்கூடிய வீரராக தோனி உள்ளார். அவரின் வழிகாட்டுதல் அணிக்கு துணை புரியும் என்று இவ்வாறு ராயுடு தெரிவித்தார்.
DINASUVADU