சார்ஜ் செய்யும் போது வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 7 வயது சிறுவன் பரிதாப பலி..

மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வீட்டில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கிள்ளதாக மாணிக்பூர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து கடந்த மாதம் 23 ஆம் தேதி அன்று அதிகாலை 4:30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

2022ல் முன்னதாகவே இது போன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

unknown node