பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனம் -அதிரடி முடிவு...!

Facebook, WhatsApp, and Google have said they will comply with the MEITY ministry's new IT rules

பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவை மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்துள்ளன.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

மேலும்,இந்த புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளாத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றும்,அதுமட்டுமின்றி குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் கடந்த 26 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில்,பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனம்,சமூக வலைதளங்கள் குறித்து மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாகவும்,புதிய விதிகளின்படி,புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளன.

ஆனால்,ட்விட்டர் நிறுவனம் மட்டும் தற்போது வரை மத்திய அரசின் புதிய விதிகளுக்கு கட்டுப்பட மறுப்பு தெரிவித்து வருகிறது.