நாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் – கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி!

நாத்தனாருக்கு தனது கள்ளக்காதல் தெரிய வந்ததால், கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி கைது.
தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரக்கூடிய குற்றங்களில் ஒன்றாக கள்ளக்காதலும் கொலையும் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிட்சர் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய பல்வந்தர் என்பவரின் மனைவி தான் ஹர்விந்த. இவர் தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு கடந்த இருதினங்களுக்கு முன்பதாக சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பல்விந்தேர் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது அவரது மனைவி உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவரது அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்பவர், எனவே அண்ணி ராஜ்விந்தரிடம் இது குறித்து விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனையில் ஹர்விந்தரின் வயிற்றில் காயமிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விசாரித்தபோது, வெளிநாட்டில் கணவர் வேலை செய்து வருவதால் அவரது அண்ணிக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் உண்டாகி உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை ஹர்விந்தர் பார்த்துள்ளார். அதனால் பதற்றமடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் அவ்விடத்தை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்தாலும், அவரை ஹர்விந்தர் தடுத்துள்ளார். எனவே அவர்கள் இருவரும் அப்பெண்ணை தாக்கி கொலை செய்து எரித்துள்ளனர். இதனை அப்பெண்ணின் அண்ணி போலீஸ் விசாரணையில் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். எனவே கள்ளக்காதல் ஜோடிகள் இருவர் மேலும், கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025