மகாராஷ்டிரத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் மார்ச் 15ல் விவசாயிகள் லக்னோ நோக்கி பேரணி...!!

Farmers are preparing for a major agitation in the BJP ruling Uttar Pradesh following Maharashtra. Farmers are marching towards Lucknow on March 15 under the auspices of the All India Farmers Association. Farmers are in full swing in the preparation of the 'Salo Lucko'. Farmers have been addressing in Lucknow on March 15, the All India Farmers Association President Ashok Dwale, General Secretary Hannaanulla and CPM Politburo member Subashini Ali. Farmers have begun to demand a one-and-a-half times cost of production at the cost of production, cut off agricultural loans, end communal politics and stop attacks on democratic rights. Farmers are preparing for 'Salalakono' across Uttar Pradesh with enthusiasm for the victory.

மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோ நோக்கி விவசாயிகள் அணிவகுக்க உள்ளனர். “சலோ லக்னோ” என்கிறபெயரில் நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்புக்கான தயாரிப்புகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.மார்ச் 15ல் லக்னோவில் நடைபெறும் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.

விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு விலைவழங்க வேண்டும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும், வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத் துள்ளனர்.மகாராஷ்டிர மாநில விவசாயிகள் நடத்திய நெடும்பயணத்தின் வெற்றி வரலாறு படைத்துள்ளது. அந்த வெற்றி அளித்திருக்கும் உற்சாகத்தோடு உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் விவசாயிகள் ‘சலோலக்னோ’ வுக்கு தயாராகி வருகின்றனர்.

#LucknowChalo#KisanLongMarchToLucknow#AIKS