அசாமில் இரண்டு பெண் போலீசார் கையில் குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இரு காவல்துறையினரும் குழந்தைகளை வைத்து இருப்பது பலரின் மனதைக் கவர்ந்து உள்ளது.ஏனென்றால் இந்த இரண்டு குழந்தைகளின் தாய் அம்மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டெட்) தேர்வு எழுத வந்து உள்ளனர்.அவரின் குழந்தைகளை தான் இரண்டு பெண் போலீசாரும் கவனமாக தேர்வு முடியும் வரை பார்த்து கொண்டனர்.இந்த புகைப்படத்தை அசாம் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. இந்த சம்பவம் அசாமின் தர்ராங் மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த பதிவிற்கு கிட்டத்தட்ட 800 லைக்குகளுக்கு மேல் சேகரித்துள்ளது. தங்களின் கடமைகாக வந்த இடத்தில் இவர்கள் தேர்வு எழுதிய தாய்மாருக்காக உதவியதற்காக இரண்டு போலீசாரையும் புகழ்ந்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடமைக்காக வந்த இடத்தில் குழந்தைகளை பார்த்து கொண்ட பெண் காவலர்கள் ..!
அசாமில் இரண்டு பெண் போலீசார் கையில் குழந்தையை வைத்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இரு காவல்துறையினரும் குழந்தைகளை வைத்து இருப்பது பலரின்