BREAKING : முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ காலமானார்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால்  காலமானார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ உடல் நல குறைவால்  காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அருண் ஜெட்லீ உடல் நலக்குறைவில்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக  சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வந்த  அவர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இதனையடுத்து  பிரதமர் நரேந்திரமோடி , குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும்  அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று  உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள்.

unknown node

இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அருண் ஜெட்லீ தற்போது  உடல் நல குறைவால் உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.